அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (1ம் தேதி) மாலை ஈரோடு வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (1ம் தேதி) மாலை ஈரோடு வருகை
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஈரோட்டிற்கு இன்று (1ம் தேதி) மாலை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஈரோட்டிற்கு இன்று (1ம் தேதி) மாலை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கரூர் வழியாக இன்று (1ம் தேதி) மாலை ஈரோடு வருகிறார்.

மாவட்ட எல்லையான கொடுமுடியில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (2ம் தேதி) காலை 10.20 மணிக்கு ஈரோடு சோலாரில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, காலை 10.45 மணிக்கு ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் ரூ.7.57 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த பின், காலை 11.30 மணிக்கு ஈரோடு அடுத்துள்ள ஆர்.என் புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து, நண்பகல் 12.20 மணிக்கு ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கினை திறந்து வைப்பதோடு, நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதனையடுத்து, மாலை 4.05 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 6.05 மணிக்கு ஈரோடு அடுத்துள்ள மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 6.50 மணிக்கு ஈரோட்டில் இருந்து கோவை புறப்படும் அமைச்சர் உதயநிதி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.

Tags

Next Story