அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஏப்.,29) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஏப்.,29) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பைல் படம்).

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை(சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அதன்படி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை கொடுத்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வருகை தர உள்ளார்.

பெருந்துறையில் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களுக்கு நாளை மாலை 4 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காந்திசிலை, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணியளவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதில், மாநில, மாவட்ட மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு கழக நிர்வாகிகள், ஊர்கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் துணை அமைப்புகளின் நிர்வாகிகள். உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு