பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
X

சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலைகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட, சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தர தீர்வு காண அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினருடனான கருத்துக் கேட்புக் கூட்டம், கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 16ம் தேதி ஆகிய தினங்களில் ஏற்கனவே நடைபெற்றது. இக்கூட்டங்களில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட் உள்ளிட்ட அலுவலர்கள் சென்னையிலிருந்து வருகை புரிந்து கழிவுநீர் தொடர்பான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, சிப்காட் தொழிற்பேட்டை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் பிரச்சினைகளை சரிசெய்ய முதலில் இங்கு செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை நேரடியாக தரையில் வெளியேற்றாமல், கழிவுநீரை குழாய் மூலமாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு எடுத்து செல்லும் வகையில் செயல்படுத்தினால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.


ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரினையும் சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைகளுக்கே வழங்குவதன் மூலம் நிலத்தடி நீர் கீழே சென்றுவிடும், இத்தகைய நிலையில் தொழிற்சாலைகளில் இருந்தும் நீர் வெளியேறாமல் தடுப்பதன் மூலம் நீர் மாசு ஏற்படுவதை முழுமையாக தடுக்கலாம். மேலும், இங்கு புதிதாக ஆழ்துளாய் கிணறு அமைப்பதற்கு அனுமதி இல்லை, மேலும், தேவை இருப்பின் அரசின் உரிய அனுமதி மற்றும் வழிகாட்டுதலின்படி தேவையான இடங்களில் ஆழ்துளாய் கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இங்கு மாசடைந்த நிலத்தடி நீரினை சுத்தகரிக்கும் பணிகள் துவங்குவதற்கான வழிமுறைகள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சிறிது கால அவகாசம் தேவை. மேலும், விரைவில் கழிவுநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.


அதே போன்று, தொழிற்சாலைகளும் பொதுமக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். ஆய்வின்போது, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, பெருந்துறை வட்டாட்சியர் பூபதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story