ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நிகழ்வு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நிகழ்வு
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரி இளநிலை வணிக மேலாண்மை கணினி பயன்பாட்டியல் துறை மாணவ, மாணவிகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் நீட்டிப்புச் செயல்பாடுகளை மேற்கொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நிகழ்வுகள் நேற்று முன்தினம் (21ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நிகழ்வுகள் நேற்று முன்தினம் (21ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைகளுக்கு அப்பால் கற்றல் எனும் பொருண்மையில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படை செயல்களைக் கற்றுக் கொள்ளும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில், நேற்று முன்தினம் (21ம் தேதி) சனிக்கிழமை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பாக குடிமைப் பணி தேர்வுகள் குறித்து சேலம் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் விழிப்புணர்வு வகுப்பு, ஐஐசி மற்றும் தொழில் முனைவோர் குறித்த அறிமுக வகுப்பு, உள்ளகப் புகார்க்குழுவின் சார்பாக முதலாமாண்டு மாணவியருக்கு புடோகோகை அமைப்பின் தற்காப்புக் கலைப் பயிற்சி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி, மாணவ மாணவியர் மீது தனி கவனம் செலுத்தும் வழிகாட்டி நிகழ்வு (மென்டார்-மென்டி), அவரவர் துறைசார்ந்த திரைப்படங்களைத் திரையிடும் நிகழ்வு மற்றும் கொடுக்கப்படும் தலைப்பில் மாணவர்கள் ஒரு நிமிடம் பேசுதல் போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தப்பட்டன.


இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரியின் போதைபொருள் எதிர்ப்பு குழுவும் இணைந்து வெள்ளோடு போலீசார் உதவியுடன் போதைபொருள் உபயோகத்தை தவிர்க்க வேண்டி வெள்ளோட்டில் நடைபயணம்(வாக்கத்தான்) மேற்கொண்டனர்.

முன்னதாக இளநிலை கணினி தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம், கணிதவியல், உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை, உளவியல் மற்றும் இயற்பியல் துறைகளைச் சார்ந்த மாணவ மாணவியர் ஈரோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை 'டெக்ஸ்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


அடுத்து இளநிலை வணிக மேலாண்மை கணினி பயன்பாட்டியல் துறை மாணவ மாணவியர் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சென்று நீட்டிப்புச் செயல்பாடுகளை மேற்கொண்டனர். அடுத்ததாக ஆடைவடிவமைப்பு மற்றும் அலங்காரவியல் துறை மாணவ, மாணவிகள் இளம்பிள்ளையில் அமைந்துள்ள ஜவுளி நெசவாலை மற்றும் ஜவுளி சந்தைக்கும், உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த மாணவ, மாணவிகள் சித்தோட்டில் அமைந்துள்ள வாழை தோட்டத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் வணிகவியல் தொழில் சார் கணக்குப் பதிவியல், நிறுமச் செயலியல் கணினி பயன்பாட்டியல், தமிழ், கணினி பயன்பாட்டியல் மற்றும் கணினி அறிவியல் பயன்பாட்டியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்டெம் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தனர்.


இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வகுப்பறைகளுக்கு அப்பால் கற்றல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வி.அன்புமணி மற்றும் குழுவினர், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர். இந்நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த கல்லூரி மாணவ மாணவிகளும் பயனடைந்தனர்.

சிறப்பான முன்னெடுப்புகளுடன் இந்நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து ஒருங்கிணைத்து நடத்திய அனைவரையும் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!