ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், 8வது கொங்கு கோப்பை பரிசளிப்பு விழா..!
கையுந்துப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில், மாநில அளவிலான 8வது கொங்கு கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிிசளிப்பு விழா திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த அக்.7ம் முதல் 9ம் தேதி (நேற்று) வரை மூன்று நாட்கள் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ‘8 வது கொங்கு கோப்பை’ விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு இடையே கபாடி, கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தப்படும் இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பள்ளிகளிலிருந்து 1700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுடன் 132 அணியினர் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் 100க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் ஆடுகள மேற்பார்வையாளர்கள் பங்களிப்புடன் அனைத்து போட்டிகளும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டன.
போட்டிகளின் தொடக்க நாள் நிகழ்ச்சி கொங்கு கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டிகளின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழா (நேற்று) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கொங்கு பொறியில் கல்லூரியின் தாளாளர் இளங்கோ, கேவிஐடிடி பாரம்பரியப் பாதுகாவலர் சச்சிதானந்தம், கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முன்னாள் மாணவரும் காவல் உதவி ஆய்வாளருமான ரூபன்ராஜ் சிறப்பு விருந்தினராகளாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பணப்பரிசாக இரண்டு லட்சம் ரூபாயுடன் கொங்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல் மேலான ஆலோசனையின் படியும், முதல்வர் வாசுதேவன் வழிகாட்டுதலின்படியும், கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநர் சங்கர் தலைமையிலான பேராசிரியர் குழு மாணவ மாணவியர் போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்கும் வகையில் உணவு, தங்குமிடம், மருத்துவ முதலுதவி மற்றும் போக்குவரத்து என அனைத்து வசதிகளையும் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu