இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
X

கோப்பு படம் 

காலிங்கராயன் பாசனத்துக்கு, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் காலிங்கராயன் அணை வாய்க்காலில் உள்ள நிலங்களுக்கு இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு இன்று 25.12.2021முதல், 24.04.2022வரை, 120 நாட்களுக்கு, 5ஆயிரத்து 184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட‌ அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!