ஈரோடு: அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி
ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம்.
அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல்துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் 9 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில், 150 வயதில் உலகளாவிய தபால் தொழிற்சங்கம் 8 தலைமுறைக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. தற்போது உலகம் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது.
எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் மரபுரிமையாக இருக்கும் என்று நீங்கள் நம்பும் உலகத்தை பற்றி விளக்கி ஒரு கடிதம் எழுத வேண்டும். கடிதம் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம். இந்த போட்டியில் சர்க்கிள் அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதேபோல், தேசிய அளவிலான போட்டியில் முதல் 3 பரிசு பெறுவோருக்கு முறையே, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம். ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும். இந்த கடித போட்டி பள்ளி அளவில் வருகிற 31ம் தேதிக்குள் நடத்தி, அதில் சிறந்த கடிதங்களை விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், 'தபால் கண்காணிப்பாளர் (எஸ்பிஓ), ஈரோடு கோட்டம், ஈரோடு 638001' என்ற முக வரிக்கு பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.
போட்டி நடைபெறும் இடம், தேதி துறையின் சார்பில் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் www.indiapost.gov.in தளத்திலோ அல்லது ஈரோடு தலைமை தபால் அலுவலகம் 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu