சித்தோடு அருகே பயங்கரம்: ரியல் எஸ்டேட் புரோக்கர் கட்டையால் அடித்துக் கொலை

சித்தோடு அருகே பயங்கரம்: ரியல் எஸ்டேட் புரோக்கர் கட்டையால் அடித்துக் கொலை
X

கைது செய்யப்பட்ட அசோக், நல்லமுத்து.

சித்தோடு அருகே குடிபோதையில் ரியல் எஸ்டேட் புரோக்கரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே குடிபோதையில் ரியல் எஸ்டேட் புரோக்கரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே ஈபி ஆபிஸ் ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ரங்கராஜ் (எ) ரங்க ராஜ் குமார் (வயது 42). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர், சித்தோடு ஓடக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே குடிபோதையில் தனது குடும்ப பிரச்னை தொடர்பாக செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு குடிபோதையில் பள்ளபாளையம், கீழ்கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவி மகனான கட்டிட தொழிலாளி அசோக் (வயது 27), பள்ளபாளையம் வாய்க்கால் மேடு கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த முனுசாமி மகனான கட்டிட மேஸ்திரி நல்லமுத்து (வயது 40) ஆகியோர் நின்று இருந்தனர்.

இந்நிலையில் குடிபோதையில் ரங்கராஜ் தங்களை கெட்ட வார்த்தையால் பேசியதாக நினைத்து, ஆத்திரமடைந்த இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் இருவரும் சேர்ந்து அங்கிருந்த கட்டையால் ரங்கராஜை தலையில் தாக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ரங்கராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக், நல்லமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story