வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்க குறைதீர் கூட்டம்
வனத்துறை குறைதீர்க்கும் கூட்டம் (பைல் படம்).
ஈரோடு வனக்கோட்ட மாவட்ட வன அலுவலகத்தில் வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
ஈரோடு வனக்கோட்ட மாவட்ட வன அலுவலகத்தில் வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்று ஈரோடு வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கு.வெ.அப்பால நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கு.வெ.அப்பால நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு வனக்கோட்டத்தில் செயல்பட்டு வரும் வனச்சரகங்களான அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி மற்றும் ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், குறைதீர் கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, ஈரோடு மாவட்ட வன அலுவலர் தலைமையில், ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் பிரதி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
மேலும், 1800-425-1107 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu