குடியரசு தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குடியரசு தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

கிராம சபைக் கூட்டம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி குடியரசு தின கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி குடியரசு தின கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான வருகிற 26ம் தேதியன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

அன்றைய தினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை பார்வைக்கு வைத்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024- 25ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், தூய்மை பாரத இயக்கம் அறிவிப்பு செய்தல், ஜல் ஜீவன் இயக்கம் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கலாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்