ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்
X

கிராம சபைக் கூட்டம் (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (2ம் தேதி) காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (2ம் தேதி) காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (2ம் தேதி) புதன்கிழமை காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம் தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநதிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை 2023-24, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுதிறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

மேலும், நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளும் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில், வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil