ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X

ஈரோட்டில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் பொன்பாண்டியன்.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் பொன்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்ற 77 மாணவர்கள் உள்பட மொத்தம் 1,493 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசியதாவது, மாணவர்களின் கையில் தான் எதிர்கால இந்தியா உள்ளது. பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் கற்ற கல்வியை, சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் பணியாற்றிட வேண்டும். கல்லூரியில் பயிலும் காலத்திலே தனித்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.


இவ்விழாவில், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கொங்குவேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலர் சச்சிதானந்தம், கல்லூரியின் முதல்வர் வாசுதேவன், கொங்கு கலைக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai solutions for small business