ஈரோட்டில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
பெருந்துறை பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.
ஈரோட்டில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி கடுமையாக திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு போக்குவரத்துக் கழக கிளையில் டிரைவராக நடராஜ் (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை ஈரோடு தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி மேலாளர் (வணிகம்) ராமகிருஷ்ணன் கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த நடராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நடராஜ் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை பணிமனை அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பாதிக்கப்பட்ட டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்க ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து டிரைவர், நடத்துனர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu