இளைஞர் அணி மாநில மாநாடு.. இரு சக்கர வாகன பிரசாரக் குழுவுக்கு கோபியில் வரவேற்பு

இளைஞர் அணி மாநில  மாநாடு.. இரு சக்கர வாகன பிரசாரக் குழுவுக்கு கோபியில் வரவேற்பு
X

,கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டி பிரிவில் ஈரோடு மாவட்ட முன்னாள் மகளிர் அணி அமைப் பாளர் ஜானகி கோபால் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவில் ஈரோடு மாவட்ட முன்னாள் மகளிர் அணி அமைப் பாளர் ஜானகி கோபால் தலைமையில் வரவேற்ப ளிக்கப்பட்டது

திமுக இளைஞர் அணி மாநில 2 வது மாநாடு பிரசார இருசக்கர வாகன பேரணிக்கு கோபியில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 -ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு குறித்து தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து மாநாட்டு அழைப்பு விடுக்கும் வகையில் 188 இருசக்கர வாகனப் பிரசார பேரணி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறுகிறது.

இந்த பேரணியை தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே நவ.15 -ஆம் தேதி தொடங்கி வைத்தார்.இந்த வாகன பேரணி 13 நாட்கள், 234 தொகுதிகள்,504 பிரசார மையங்கள், 8647 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செல்கிறது.

இந்நிலையில், இளைஞர் அணி மாநாடு இரு சக்கர வாகனப் பிரசார குழுவுக்கு,கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டி பிரிவில் ஈரோடு மாவட்ட முன்னாள் மகளிர் அணி அமைப் பாளர் ஜானகி கோபால் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப் பாளர் மூணாம்பள்ளி மணி, கோபி நகர் மன்ற உறுப்பினர்கள் சினிவாசன் மற்றும் மூர்த்தி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அளுக்குளி பாலு, முன்னாள் கலை இலக்கிய பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் தென்றல் ரமேஷ். முன்னாள் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் ஒத்தக்குதிரை விஜய் மற்றும் சேகர், ஞானசேகர் மாவட்ட முன்னாள் தொண்டரணி துணை அமைப்பாளர், கோபி பிரகாஷ் , தன்னார்வலர்கள் வெற்றி, கோபி சரத், ஜான் பாட்சா, தனபால் ராஜேந்திரன், நாயக்கன் காடு சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி