நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்

நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.

நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி மூட்டைகள், கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நம்பியூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் நேற்றிரவு நம்பியூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பிக்கப் வேனில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மூட்டைகளை பற்றி விசாரிக்கும் போது அவர்கள் முன்னுக்குப் பின்னாக முரணாக பதில் கூறியுள்ளார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மூட்டைகளை சோதனை செய்து கொண்டிருந்த போது மூட்டைகளை வாகனத்தை ஏற்றியவர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். ரேசன் அரிசி இருந்த பிக்கப் வாகனம் மற்றும் 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நம்பியூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து உணவு பொருள் பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!