தமிழ்பாடத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதாத சம்பவம் புதிது
வெள்ளாளபாளையம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனாக்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் தமிழ் பாட பிரிவு எழுதாதது குறித்து ஆய்வு செய்து சரியான காரணங்களை அறிந்து சட்டமன்றத்திலே அதற்கான விளக்கங்களை அரசு அளிக்க வேண்டும் என்றார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரியூர் வெள்ளாளபாளையம் மற்றும் நஞ்ச கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 71 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை வசதி தார் சாலை அமைத்தல் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
தொடர்ந்து வெள்ளாளபாளையம் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 50,000 மதிப்பீட்டில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக இருக்கைகளை கே.ஏ செங்கோட்டையன் வழங்கினார்பின்னர் பள்ளியில்வெள்ளாளபாளையம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனாக்கள் வழங்கினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில். 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று. 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை என ஆய்வு செய்து ஒரு ஆணையும் அமைத்து சரியான காரணங்களை தெரிந்து, அரசு சட்ட மன்றத்தில் அதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் ,என்றார்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் உடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு இருந்தால் செயல்படுவேன் என தெரிவித்ததற்கும் சசிகலாவை விரைவில் சந்திக்கப் போக உள்ளதாக தெரிவித்ததற்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறாமல் தவிர்த்துவிட்டு சென்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்திய பாமா, யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன், வெள்ளாளபாளையம் பஞ்சாயத்து தலைவர் சத்தியபாமா வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu