முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறக்க ஈரோடு வருகிறார் முதலமைச்சர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறக்க ஈரோடு வருகிறார் முதலமைச்சர்
X

inauguration ceremony of karunanidhi statue-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Karunanidhi Statue-வரும் 25ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார்.

Karunanidhi Statue- ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை திறப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகிறார். வரும் 25ம் தேதி வரவுள்ள முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் கோபி, நஞ்சகவுண்டன்பாளையம் வழியாக டி. என். பாளையம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டிக்கு வரஉள்ளார். அங்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மறுநாள் (26ம் தேதி) சோலார் அருகே உள்ள புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள திடலில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது