நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
தாங்கள் படித்த பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ.1.லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை தங்கள் பயின்ற பள்ளிக்கு வழங்கினார்.
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த 1968 முதல் 1976 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 36 பேர் அவர்கள் பயின்ற பள்ளியை மேம்படுத்தும் நோக்கிலும் மாணவர்களின் நலனுக்காகவும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புத்தகங்கள் வைக்கும் 3 பீரோக்கள் மற்றும் தொலைகாட்சி வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ள ஸ்மார்ட் டிவி ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்,
மேலும் கணக்கு பாட பிரிவில் பின்தங்கிய மாணவர்களுக் காக அவர்களது சொந்த செலவில் தனி ஆசிரியர் நியமிக்கப்பட்டு கற்கொடுக்க முன்னாள் மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
பின்னர் மாணவர்களிடையே பேசிய முன்னாள் மாணவர் ஒருவர், நாங்கள் பயின்ற காலகட்டத்தில் இப்போது உள்ள ஸ்மார்ட் வசதிகள் இல்லை, அதனால் அதிக விஷயங்கள் எங்களுக்கு கிடைக்காமல் போன காரணத்தால் நாங்கள் கற்பதில் சில பின்னடைவுகள் இருந்தது.
ஆனால், தற்போது உங்களுக்கு தேவையான சில குறைகளை முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம். மாணவர்களாகிய நீங்கள் நன்கு கற்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த பள்ளியை பயன்படுத்தி கொள்ளவேண்டும். எங்களுக்கு கிடைக்காதது உங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பேசியது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu