இலவச தையல் இயந்திரம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

இலவச தையல் இயந்திரம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை விண்ணப்பம் நேரடியாக பெறப்பட்டு வந்தது. தற்போது அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறுவதை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வலை பயன்பாடு தயார் செய்யப்பட்டு அரசு சேவை மையங்களில் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இலவச தையல் இயந்திரம் வேண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் யாவும் இணையத் தின் மூலமாக பதிவேற்றம் செய்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி, இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வயது சான்று (21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்), ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, வருமானச் சான்று (ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல்), வட்டாட்சியரால் வழங்கப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மற்றும் அசல் சான்றுகளுடன் சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டுடன் அதன் நகல்களை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!