அந்தியூரில் தென்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்.!
அந்தியூரில் தென்பட்ட வெளிநாட்டு பறவைகள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினர் சார்பில், ஒருநாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்ற கணக்கெடுப்பில், மொத்தம் 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைப் பறவை இனங்களும், 30-க்கும் மேற்பட்ட பொதுப் பறவைகள் இனங்கள் என மொத்தம் 120-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், பாம்புண்ணி கழுகு, தடித்த அழகு மீன்கொத்தி, வானம்பாடி, ஊசிவாள் வாத்து, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து குக்ருவாள், இருவாச்சி, செந்நீல கொக்கு, மரகத புறா உள்ளிட்ட பறவை அந்தியூரில் தென்பட்டதால் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலசைவரும் பறவை இனங்களில் ஒன்றான யூரோப்பியன் விஈடர் பறவை காணப்பட்டது.
பூச்சிகளை மட்டுமே உண்ணும் பறவையான இது தமிழில் பஞ்சுருட்டான் என அழைக்கப்படுகிறது. இதே போல 50 ஆண்டு காலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி குடும்பத்தை சேர்ந்த மிக அரிதாக தென்படும் மலை இருவாச்சி பறவையும் தென்பட்டுள்ளது. மேலும், இமயமலை பகுதியில் இருக்கும் வெர்டிட்டர் பிளைட் கேட்ச்சர் பறவைகளும் அந்தியூர் வனப்பகுதியில் தென்பட்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தியூரில் தென்பட்ட பறவைகள் - சிறப்பு படத்தொகுப்பு :-
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu