விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; வனத்துறையினர் கூண்டு வைத்து நடவடிக்கை

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; வனத்துறையினர் கூண்டு வைத்து நடவடிக்கை
X

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து சென்னம்பட்டி வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அந்தியூர் அடுத்த புதுக்காடு பகுதியில் விவசாயிகள் போராட்டம் அறிவித்ததையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தியூர் அடுத்த கோவிலூர் அருகே உள்ள புதுக்காடு பகுதியில் பொதுமக்கள் போராட்டம் அறிவித்ததையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கோவிலூர், புதுக்காடு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, விவசாயத் தோட்டத்தில் புகுந்தது. அங்கிருந், நாயைக் கடித்து இழுத்துச் சென்றது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்னம்பட்டி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் காலடித் தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலும், விவசாயத் தோட்டத்து வீடுகளிலும் உள்ள மக்களுக்கு சிறுத்த நடமாட்டம் உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.


மேலும், ஐந்து இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. இருந்தபோதிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டம் குறித்து அச்சத்தில் உள்ள அப்பகுதி விவசாயிகள், நேற்று முன்தினம் மாலை (புதன்கிழமை) புதுக்காட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில், வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


மேலும் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் 14-ம் தேதி விவசாயிகள் ஒன்று கூறி போராட்டம் நடத்துவோம் என கூட்டத்தில் முடிவு செய்தனர். இது சம்பந்தமாக மனுவாக எழுதி அனைவரும் கையெழுத்திட்டு சென்னம்பட்டி வனத்துறையிடம் வழங்கினர். இந்நிலையில், புதுக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு இன்று (வெள்ளிக்கிழமை) வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குப் பின்னர், மிக தாமதமாக கூண்டு வைக்கப்பட்டதும், வனத்துறையினரின் அலட்சியப் போக்கும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!