கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: களையிழந்த மாட்டுச்சந்தை
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இன்று ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
எனினும், தமிழகத்தில் இரவு, 10:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை, இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா போன்ற பிற மாநில வியாபாரிகள், இந்த சந்தைக்கு அதிகளவில் வரவில்லை தென்மாவட்டங்கள், மலைப்பகுதி மாடுகளும் வரத்தாகவில்லை.
இதுபற்றி, மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கருங்கல்பளையம் மாட்டுச்சந்தையில் வழக்கமாக, 800 முதல், 900 மாடுகள் வரத்தாகி, விற்பனை களைகட்டும். ஆனால் தற்போது கொரோனா தொற்று அச்சம், இ–பாஸ், ஊரடங்கு போன்ற காரணங்களால், வெளிமாநில வியாபாரிகளின் வருகை மிகக்குறைவாகவே இருந்தது.
இன்று, 350பசுக்கள், 100எருமைகள், 50கன்றுகள் என 500 மாடுகளே வரத்தாக இருந்தன. அதேபோல் விற்பனையும் மிகக்குறைவாகவே நடந்து, களையிழந்து காணப்பட்டது. வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைவாக இருந்ததால், 40 சதவீத மாடுகளே விற்பனையாகின. விற்பனையாகாத மாடுகளை, அதன் உரிமையாளர்கள் சோகத்துடன் வேனில் ஏற்றி, ஊருக்கு அழைத்து சென்றனர். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu