ஈரோடு ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
X
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்க கூடாது , ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்க கூடாது

ஈரோடு ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு ரயில்நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்க கூடாது. ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்க கூடாது. ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்க கூடாது. புதுச்சேரி மற்றும் சண்டிகர் மாநிலங்களில் பெட்ரோல் மானியம் வழங்குவதை போல், நாடு முழுவதும் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!