ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி புத்தாண்டு நிகழ்ச்சி..!
ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி சார்பில் ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி சார்பில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி சார்பில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பாவலரேறு அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணித் தலைவர் நெல்லை ராஜா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் ஈரோடு பிரபுவின் சிரிப்பும் சிந்தனையும் என்கிற தலைப்பில் நகைச்சுவை நிகழ்ச்சியும், இன்னிசை பாடல்களும் இடம் பெற்றன.
தொடர்ந்து, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் சண்முகவேலின் வெளியீடான காகித பொட்டலத்தில் நெருப்பை மறைத்து வைக்க முடியாது எனும் சிறு நூல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேரமைப்பின் இளைஞரணியைச் சேர்ந்த அருள்ஜோதி என்பவரின் மகன் சதீஸ்வர் ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்துள்ளதை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் சேகர் நன்றியுரை ஆற்றினார். முடிவில், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு வேலைத் திட்டமாக தமிழக அரசின் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளையும், தமிழில் வைப்பதற்கான ஆணையை நிறைவேற்றும் பணியை மாவட்டம் முழுவதும் இளைஞரணி முன்னெடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu