குளூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஈரோடு ஆட்சியர் பங்கேற்பு..!

குளூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஈரோடு ஆட்சியர் பங்கேற்பு..!
X

குளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றுக் கொண்டார்.

காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள குளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.

காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள குளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை (இன்று) காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:-

கிராம சபை கூட்டமானது, ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா, குடியரசுதின விழா, மே தினம், காந்திஜெயந்தி, உலக தண்ணீர் தினம் மற்றும் ஊராட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் மற்றும் சிலமுக்கியமான தினங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மகாத்மா காந்தியடிகளின் 155வது பிறந்த நாளான திங்கட்கிழமை (அக்.2) இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தேவைகள் குறித்து திட்டங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தங்களது ஊராட்சி ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இவ்விருதை பெற்ற ஊராட்சிக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.


முன்னதாக, கிராம சபை கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள முத்தான திட்டங்களான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றிய உரை ஆகியவை அடங்கிய வீடியோ படக்காட்சிகள் திரையிடப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குளூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, இணை இயக்குநர்கள் முருகேசன் (வேளாண்மை), பழனிவேல் (கால்நடை பராமரிப்பு), துணை இயக்குநர்கள் மரகதமணி (தோட்டக்கலைத்துறை), சாவித்திரி (வேளாண் விற்பனை), மகாதேவன் (வேளாண் வணிகம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசர், சண்முகபிரியா, குளூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், மொடக்குறிச்சி வட்டாட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு