ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி

ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
X

வெண்டிபாளையம் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்.

கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

காசிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெண்டிபாளையத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு போக்குவரத்திற்கு பிரதான சாலையாக இங்குள்ள இரண்டு ரயில்வே நுழைவு பாலங்களும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது பருவகால மழை தொடங்கி அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. வடிகால் வாய்க்கால் சரியில்லாத நிலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future