ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை
X

பைல் படம்

கடந்த இரண்டு வாரமாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 886 ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 141 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 9 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!