கருங்கல்பாளையம் சந்தைக்கு அதிகளவில் மாடுகள் வரத்து
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தையானது, வாரம்தோறும் புதன்கிழமை இறைச்சிகளுக்கான மாடுகள் விற்பனை நடைபெறுகிறது. வியாழக்கிழமை நடைபெறும் சந்தையில், பசு மற்றும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த சந்தையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதோடு மாடுகளை விற்பனையும் செய்கின்றனர்.
குறிப்பாக, அதிக பால் தரக்கூடிய மாடுகளான ஜெர்சி, பிரீஸ் மற்றும் நாட்டு பசு மாடுகளும், முர்ரா ரக எருமைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று நடைபெற்ற சந்தையில், பசு மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. எருமைகள் 30,000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மாடு வரத்து அதிகரித்த போதும் மழையால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இன்றைய சந்தையில் 300 பசு மாடுகளும் 500 எருமைகளும் 200 கன்றுகளும் என சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu