108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு
பைல் படம்
ஈரோட்டில் இன்று 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்க ளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுபற்றி, 108 ஆம்புலன்ஸ் திட்ட அதிகாரி வெளியிட்ட தகவல்: ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடத்துக்கு நேர்காணல் இன்று (செப்.29 - வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காசநோய் ஹாலில் நடக்க உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங் அல்லது அதற்கு இணையா படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம், 15,435 ரூபாயாகும். நேர்முக தேர்வு அன்று, 19 வயதுக்கு மேல், 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் என இரு பாலரும் பங்கேற்கலாம்.
எழுத்து தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு பரிசோதனை, மனித உடற்கூறு இயல் மற்றும் மனித வளத்துறை நேர்காணல் நடக்கும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி, அளிக்கப்படும். பயிற்சி காலத்துக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
அதுபோல, ஓட்டுனர் பணிக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மாத ஊதியம், 15,235 ரூபாயாகும். 24 முதல், 35 வயதுக்கு உட்பட்ட, 162.5 செ.மீ.,க்கு மேல் உயரமுள்ளவர்கள், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, 3 ஆண்டுகள் அனுபவம், பேட்ஜ் உரிமம் பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, வாகனம் ஓட்டுதல், மனித வளத்துறையின் நேர்காணல் நடத்தப்படும்.தேர்வு செய்யப்படுபவருக்கு, 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி தரப்படும். பயிற்சி காலத்தில் தங்க வசதி செய்து தரப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu