ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்
X
ஈரோடு மாநகர் பகுதியில், ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில், டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முதல் மாவட்டத்தில் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஈரோடு மாநகரில், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், சவிதா பஸ் நிறுத்தம், மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வகையில், ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 200 வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.100 அபராதம் விதித்து ரூ.25 ஆயிரம் வசூலிக்கபட்டதாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறினார்.

Tags

Next Story