ஈரோடு மாட்டு சந்தையில் குவிந்த மாடுகள்: வியாபாரிகள் குறைவால் விற்பனை சரிவு

ஈரோடு மாட்டு சந்தையில்  குவிந்த மாடுகள்: வியாபாரிகள்  குறைவால் விற்பனை சரிவு
X

ஈரோசு கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தையில் விற்பனை கொண்டு வரப்பட்ட பசுமாடுகள்

Erode Cattle Market-தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2 -ஆம் தேதிக்கு பிறகே மாட்டுச்சந்தை விற்பனை சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது

Erode Cattle Market-ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் அதிகமான வரத்து இருந்த போதிலும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக விற்பனை சரிந்து போனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, ,கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்க ணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் கடந்த சில 2 வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சந்தையில் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வரவில்லை.இதனால் வியாபாரம் எதிர்பார்த்த வகையில் இல்லை. இதேபோல் கடந்த இந்த வாரமும் வெளிமாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் சொற்ப எண்ணிக்கையிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு வசதியாக மாட்டுச்சந்தை வளாகத்திலேயே கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

அதில் மாட்டு வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டனர். இன்று கூடிய சந்தையில் 350 பசுமாடுகள், 250 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று 70 சதவீதம் மாடுகள் விற்பனை ஆகின. சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப் படுகிறது. அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் காண்பித்து செல்லலாம் என கூறப்பட்டு இருந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2 -ஆம் தேதிக்கு பிறகே மாட்டுச்சந்தை விற்பனை சூடு பிடிக்கு என சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story