ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்களி்ல செலிவியர் பணி வாய்ப்பு
ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார செவிரியர் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மாதம் ரூ.14,000/- ஊதியம் வழங்கப்படும்.. இந்த பணியிடங்களுக்கு Auxilliary Nurse Midwife படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். எக்காரணம் கொண்டும் பணிவரன்முறை, அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
10-ம் வகுப்பு மதிப்பெண் (20 சதவீதம்)12-ம் வகுப்பு மதிப்பெண் (30 சதவீதம்), தகுதியான பட்டயப்படிப்பில் 50 சதவீதம் என மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு நடைபெறும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் கல்வி தகுதி பதிவு பெற்று இருக்க வேண்டும். கல்விச் சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மே-26-ஆம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீளாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu