எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்
X

 யூ டியூபர் ஆரிப் ரகுமான் மற்றும் மக்கள் ஜி. உணர்வுகள் சமூக நல அமைப்பு சார்பில் எச்ஐவி பாதித்த குழந்தை களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

யூ டியூபர் ஆரிப் ரகுமான் மற்றும் உணர்வுகள் சமூக நல அமைப்பு சார்பில் எச்ஐவி பாதித்த குழந்தை களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.

தமிழகத்தின் பிரபல யூ டியூபர் ஆரிஃப் ரகுமான் மற்றும் உணர்வுகள் சமூக நல அமைப்பு சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் காசநோய் பிரிவு ஹாலில் எச்ஐவியால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முதியோர் ஆகியோருக்கு தீபாவளியை யொட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு, உணர்வுகள் சமூகநல இயக்கத்தின் தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குனர் தேவராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குனர் பிரேமாகுமாரி, மாவட்ட திட்ட அலுவலர் துரைசாமி, கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர், உணர்வுகள்.. அமைப்பின் நிர்வாகிகள் பிரபு அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 153 குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முதியோர் என 350 க்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் யு-டியூபர் ஆரிஃப்கான் பேசும்போது, எதுவும் அறியாத குழந்தைகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு இருப்பதை காணும் போது அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாம் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எனக்கு கிடைக்கும் வருவாயிலிருந்து இந்த ஆண்டு புத்தாடைகளை உங்களுக்கு வழங்கி இருக்கிறேன்.

இனி வரும் காலங்களில் இந்த குழந்தைகளை இலவச சுற்றுலா அழைத்துச் செல்லும் எண்ணமும் உள்ளது. நாம் செய்யும் உதவிகளை பார்த்து மற்றவர்களும் இதுபோல உதவி புரிய முன் வரவேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்றார்.

Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர