/* */

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில்ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

ஈரோடு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அதானி அம்பானிக்கு எஸ்.பி.ஐ பங்குகளை தாரைவாய்ப்பு, எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை, மேலும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டதற்கு மத்திய அரசின் 9 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், கதிர்வேல், ரவி, ஈஸ்வரமூர்த்தி, ராவத் குமார், மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீதாபதி பழனிவேல், வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன், பேரூர் தலைவர்கள் வேலுச்சாமி, சுந்தரம், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 19 March 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!