அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்கள் பதிவு செய்யணும்:அதிகாரி தகவல்

பைல் படம்
அரசு நலத்திட்ட உதவிகளை பெற தூய்மை பணியாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று துப்பரவு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணியாளர்கள், கழிவு நீர் வடிகால் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியாளர்கள், மலக்கசடு கழிவு நீர்த்தொட்டி சுத்தம் செய்யும் பணியாளர்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணியாளர்கள் பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள் சுத்தம் செய்யும் பணியாளர்கள் உள்ளனர்.
இவர்களை துய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் இணைக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள 13 கணக்கெடுப்பாளர்கள் வசம் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மாநகராட்சி பணியில் உள்ள பணியாளர்கள் மட்டுமல்லாது பிற துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மேற்படி பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இந்த கணக்கெடுப்பில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பணியாளர்களை மேற்படி பணியில் அமர்த்திக்கொண்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்களை ஊக்குவித்து அவர்கள் விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தி பதிவு செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த கணக்கெடுப்பு வருகிற 16-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் இந்த தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்து, தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பணிப்பாதுகாப்பு பெறவும், அரசு நலத்திட்டங்களை பெறவும் இந்த கணக்கெடுப்பு மூலம் வழிவகை செய்யப்பட உள்ளது. எனவே தூய்மை பணியாளர்கள் தவறாமல் கணக்கெடுப்பாளர்கள் வசம் தங்களது விபரங்களை விடுபடாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாநகராட்சி மைய மற்றும் மண்டல அலுவலகங்களை அணுகலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu