/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 188 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில், நாளை 40 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 188 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) 188 இடங்களில் 40 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 24 இடங்களில் 8 ஆயிரத்து 500 பேருக்கும், ஈரோடு புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் ஆயிரத்து 900 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 6 இடங்களில் 2 ஆயிரத்து 700 பேருக்கும்,

கொடுமுடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 2 ஆயிரத்து 400 பேருக்கும்,

சென்னிமலை சுற்று வட்டாரத்தில் 12 இடங்களில் 3 ஆயிரத்து 050 பேருக்கும்,

பெருந்துறை சுற்று வட்டாரத்தில் 5 இடங்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கும்,

சத்தி சுற்று வட்டாரத்தில் 9 இடங்களில் 2 ஆயிரத்து 800 பேருக்கும்,

நம்பியூர் சுற்று வட்டாரத்தில் 10 இடங்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கும்,

புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியில் 6 இடங்களில் 1 ஆயிரத்து 800 பேருக்கும்,

கோபி சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 600 பேருக்கும்,

டி.என்.பாளையம் சுற்று வட்டாரத்தில் 4 இடங்களில் ஆயிரத்து 500 பேருக்கும்,

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 6 இடங்களில் 2 ஆயிரத்து 200 பேருக்கும்,

அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தில் 6 இடங்களில் 2 ஆயிரத்து 400 பேருக்கும்,

பவானி சுற்று வட்டாரத்தில் 15 இடங்களில் 3 ஆயிரத்து 500 பேருக்கும்,

தாளாவடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 800 பேருக்கும் என மொத்த 40 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Updated On: 17 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...