ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பைல் படம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சிமண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம், தினக்கூலி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707/-ஐ 2023 ஆகஸ்ட் முதல் நாளொன்றுக்கு ரூ.687/- ஆக சட்ட விரோதமாக குறைத்துள்ளதைக் கண்டித்தும், நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களின் அறிவுறுத்தல் படியும், சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், 1948-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட, அரசாணை 62-ன் படியான குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ 725/- ஐ முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும், ஓய்வு மற்றும் இறப்பு காலங்களில் பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதியன்று ஊதியம் வழங்க வேண்டும், மாநகராட்சி பெயர் பொறித்த 3 செட் சீருடைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியெறுத்தி 29-12-2023 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
அதற்கு முன் தயாரிப்பாக, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 19-12-2023 அன்று 4-வது மண்டல அலுவலகம் முன்பும், 20-12-2023 அன்று 1-வது மண்டல அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு சூரம்பட்டி 1-வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க செயலாளர் ஆர்.மணியன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பி.ரவி (ஏஐடியுசி), ஏ.செல்லவேல் (சிஐடியு), எம்.குணசேகரன் (பிஎஸ்டியு), உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர் வெள்ளிக்கிழமை.(22-12-2023) காலை 5.45 மணிக்கு 2-வது மண்டலம் - பெரியசேமூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதேபோல, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், வீரப்பன் சத்திரம், திண்டல், வாட்டர் டேங்க் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டங்களில் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும், அந்தந்த பகுதி தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu