ஈரோட்டில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள் ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தா கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu