ஈரோடு: நம்பியூர் அருகே வாலிபர் போக்கோ சட்டத்தில் கைது

ஈரோடு: நம்பியூர் அருகே வாலிபர் போக்கோ சட்டத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட தங்கராஜ்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே, நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அழகர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 20) என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கவேல் சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக தங்கவேல் குடிபோதையில் சிறுமியை அடித்துள்ளார்.

இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் சைய்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட சைய்டு லைன் அமைப்பினர் நடத்திய விசாரணையில், சிறுமி உரிய திருமண வயதை அடையாமல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, கோபி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியின் அக்கா அளித்த புகாரில் பேரில், கோபி அனைத்து மகளிர் போலீசார் தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்தனர். பின்னர், ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜார் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!