ஈரோடு,சேலம் சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு சேலம் திருமண்டல (பொ) பேராயர் டாக்டர் சந்திரசேகர்.
ஈரோடு சேலம் சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பதவிக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இன்று ஈரோடு சேலம் திருமண்டல (பொ) பேராயர் டாக்டர் சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபை என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, யாழ்பாணம் ஆகிய பகுதிகளை கொண்டது. இதில் 24 திருமண்டலங்கள் இருந்தது. கடந்தாண்டு கோவை திருமண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஈரோடு சேலம் திருமண்டலமாக கடந்தாண்டு ஜனவரி முதல் செயல்பட்டு வருகின்றது.
இதன் மூலம் தென்னிந்திய மண்டலத்தின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு சேலம் திருமண்டலத்திற்கு பேராயர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான செயற்குழு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஈரோட்டில் தேர்தல் நடத்தவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர்தலை நடத்துவதற்காக நெல்சன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று 10ம் தேதி தொடங்கி வருகின்ற 25ம் தேதி நிறைவடைகின்றது. அதன்பிறகு வேட்புமனு பரிசீலனை நடைபெறும், இத்தேர்தலில் ஈரோடு, சேலம் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 166 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இத்தேர்தலில் போட்டியிட 50 வயதை கடந்திருக்க வேண்டும், பாதிரியாராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும், தகுதியானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu