சென்னிமலையில் ஈங்கூர் இந்துஸ்தான் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம்..!

சென்னிமலையில் ஈங்கூர் இந்துஸ்தான் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம்..!
X

கல்வி கருத்தரங்க நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில், நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.

சென்னிமலையில் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில், நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.

ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, சென்னிமலை விடியல் அறக்கட்டளை, சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை மற்றும் கொங்கு மஹால் ஆகியவை இணைந்து பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தான கல்வி கருத்தரங்கம் சென்னிமலையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கருத்தரங்கில் எஸ்.எஸ்.எல். சி. மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ,மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?வேலைவாய்ப்பு உள்ள உயர் கல்வி எது? ஆகியவற்றுக்கு வழிகாட்டும் வகையில் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்நிகழ்வு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையனின் வழிகாட்டலில் நடைபெற்றது. முன்னதாக கல்லூரி முதல்வர் ராமன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியானது, சென்னிமலை வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!