அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு தற்செயல் தேர்தலில் திமுக வெற்றி
அத்தாணி பேரூராட்சி 3-வது திமுக கவுன்சிலர் சாந்திமணி.
ஈரோடு மாவட்டம், அத்தாணி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 3-வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் இறந்தார். அதனால், இந்த வார்டில் தற்செயல் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்தது.
இதில் திமுக சார்பில் சாந்திமணி, அதிமுக செல்லவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் மோதிலால் பிரசாத் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.இந்த வார்டில் மொத்தமுள்ள 379 ஓட்டுகளில், 318 ஓட்டுக்கள் பதிவாகின.
அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. திமுக வேட்பாளர் சாந்திமணி 261 ஓட்டுக்களும், அதிமுக வேட்பாளர் செல்லவேல் 53, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோதிலால் பிரசாத் 4 ஓட்டுக்களும் பெற்றனர். திமுக வேட்பாளர் சாந்திமணி அதிமுகவை விட 208 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சாந்திமணிக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உட்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu