குழந்தைகள் இல்லங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு..!
ஆர்.என்.புதூர் அன்னை சத்யா, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதூர். அக்ரஹாரம், மரப்பலாம் ஆகிய பகுதிகளில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத்துறை இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015ன் திருத்தப்பட்ட சட்டம் 2021ன் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் செயல்பட்டு வரும் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம், அசிசி பவன் குழந்தைகள் இல்லம், ஹெல்பிங் ஹார்ட்ஸ் குழந்தைகள் இல்லம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தத்து வளமையம் ஆகிய குழந்தைகள் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், சமையலறைகள், குழந்தைகள் தங்கியுள்ள அறைகள், கழிப்பறைகள், சுற்றுபுறத்தூய்மை போன்றவைகளை பார்வையிட்டார். முன்னதாக, அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் தங்கி உள்ள குழந்தைகளின் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டு ஆற்றுப்படுத்துநரை தொடர்ந்து இல்லத்திற்கு வர அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஹெல்பிங் ஹார்ட்ஸ் தத்து வளமையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் விவரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் மருத்துவ பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், குழந்தைகளின் இல்லங்களுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளதா என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu