ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு: ஆட்சியர் ஆய்வு..!

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு:  ஆட்சியர்  ஆய்வு..!
X

ஈரோடு காசிபாளையம் நியாய விலைக்கடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்டுகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண் டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பச்சரிசி,சர்க்கரை,முழுக்கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காசிபாளையம் நியாய விலைக்கடையில் நடைபெற்று வருகிறது. இப்பணியை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!