நெருங்கியது தீபாவளி: ஜவுளி வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் வெள்ளம்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளிகள் வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் ஜவுளி வாங்க, நேற்று மக்கள் வெள்ளம் அலைமோதியது. மழை ஓரளவு விட்டிருந்ததால் ஏராளமானோர் துணிகள், பொருட்களை வாங்க வந்திருந்தனர். தீபாவளி மக்கள் நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர்.

அவ்வகையில் ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். மேலும் போக்குவரத்து போலீசார், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரமக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Tags

Next Story
future of ai in retail