பவானி: பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.03 கோடிக்கு பருத்தி ஏலம்

பவானி: பூதப்பாடி  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.03 கோடிக்கு பருத்தி ஏலம்
X

ஏலத்திற்காக கொண்டு வரப்பட்ட பருத்தி மூட்டைகள்.

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.4 கோடியை 3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது . இந்த வாரம் நடந்த ஏலத்துக்கு கர்நாடக மாநிலம் மற்றும் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கொளத்தூர், எடப்பாடி, தேவூர், அந்தியூர், பவானி, அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இங்கு ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

மொத்தம் 12,296 மூட்டை பருத்தி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் இங்கு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பி.டி. ரக பருத்தி 4432.66 குவிண்டால் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.88.79-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.99.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 கோடியே 3 லட்சத்து 48 ஆயிரத்து 327-க்கு விற்பனையானது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!