ஈரோடு மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாபெரும் சிறப்பு முகாமில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4ம் அலையை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று 31-வது கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். நகர்ப்புற சுகாதார மையங்கள். பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் உள்பட 3.194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளர்கள் ஈடுத்தப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமித் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!