ஈரோட்டிலிருந்து சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த ஆட்சியர்

ஈரோட்டிலிருந்து சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த ஆட்சியர்
X

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி வைத்தார்.

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனம் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக பல்வேறு நிவாரணப் பொருட்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி வைத்தார்.‌

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனம் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக பல்வேறு நிவாரணப் பொருட்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை சென்னைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி வைத்தார்.

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட பொதுமக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் 1680 மில்கா பிரட் பாக்கெட்கள், 5280 குடிநீர் பாட்டில்கள், 540 பிஸ்கட் பாக்கெட்கள், 3,000 ரக்ஸ் பாக்கெட்கள், 2130 போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை முதல் கட்டமாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) காலை அனுப்பி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக, 9362 குடிநீர் பாட்டில்கள், 40668 பிஸ்கட் பாக்கெட்கள், 1195 போர்வைகள், 5345 பிரட் பாக்கெட்கள், 300 கோதுமை மாவு பாக்கெட்கள், 2710 எண்ணிக்கையிலான ஆயில் மற்றும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள், 200 பால் பவுடர் பாக்கெட்டுகள், 558 அரிசி பண்டல்கள், 180 மெழுகவர்த்தி பாக்கெட், 2400 தீப்பெட்டிகள், 2400 குளியல் சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தினை ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) லதா, மாவட்ட வன அலுவலர்கள் வெங்கடேஷ் பிரபு (ஈரோடு சரகம்), சுதாகர் (ஆசனூர் சரகம்), உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
future of ai in retail