கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2019-2021ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஹெச். கிருஷ்ணனுண்ணி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் 2019-2023 ஆம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, வழக்கு பதிவேடு, நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள் முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நில அளவைத் துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, குடிமைப் பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்ட கலால், நில அளவை பிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார். மேலும், ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிளசுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்,

இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி, அலுவலக மேலாளர் (பொது) பூபதி, வட்டாட்சியர்கள் கார்த்தி, ரவிசங்கர் (கலால்) (பொ), (கலால்) (பொ), வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் உட்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்