பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.13 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி

பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.13 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி
X

சிறுவர் பூங்கா அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

பி‌.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Construction of a children's park at a cost of Rs. 13 lakhs in P. Mettupalayam Town Panchayat | பி‌.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் பொதுமக்கள் நடை பயிற்சி செல்ல நடைபாதை, அழகிய செடிகள் மற்றும் புல் தரை, பொதுமக்கள் இளைப்பாற இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை (இன்று) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு சிறுவர் பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி குமாரசாமி, துணைத் தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story